சரணடைதல் என்பது உலகம் முழுவதும் உள்ள எல்லா மதங்களாலும் வலியுறுத்தப்படும் தத்துவம். சரணடைதல் என்பது வாழ்வை, பொறுப்புகளை, கடமையை துறந்து விடுவது அல்ல. நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் “நான் என்கிற தன்மையை” துறந்துவிடுவது. நாம், நான் என்ற தன்முனைப்பில் செய்யும் ஒரு செயலுக்கும், முழுவதுமாக கடவுளிடம் சரணடைந்து விட்டு ஒரு செயலை செய்வதற்கும் நிறைய வேற்றுமை இருக்கிறது.

தன்முனைப்பால் வெற்றி கிடைக்கும் என்பது உண்மைதான். அனால் தோல்வியை ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலையை தன்முனைப்பு தராது. மாறாக தன்முனைப்பு விரக்தியை தந்துவிடும். சரணடைதல் நம் வாழ்க்கையை எளிமையாக்குகிறது. சரணடைவதால் நம் உடலும் மனமும் இலகுவாகிறது. தன்முனைப்பால் செய்கின்ற காரியங்களை விட ஆயிரம் மடங்கு வலிமையானா காரியங்களை சரணடைவதின் மூலம் செய்து விட முடியும். இந்ததியாவில் தோன்றிய சீக்கிய மதம் சரணடைதலை பெரிதும் வலியுறுத்துகிறது.

இன்னும் சொல்வதென்றால் சிக்கிய மதத்தின் உயிர் நாடியே சரணடைவது தான்.

‘அகால் புருஷ்”; என்று அவர்கள் இறைவனை உருவாக படுத்துகின்றனர்.

ஓர் இறைத்தன்மை என்று அதற்கு பொருள் இந்த ஓர் இறைத்தன்மையை அவர்கள் “குரு” வாக உருவகப் படுத்துகின்றனர் .

“;வாஹே குரு”; என்கிற சீக்கிய மதத்தின் மந்திரம் “குரு நல்லவர் என்பதோ குரு நம்மை காப்பாற்றுவார்” என்பதோ அல்ல மாறாக “குரு எவ்வளவு அற்புதமானவர்” என்று குருவை வியக்கிறது.

இந்த வார்த்தையில் விண்ணப்பம் எதுவும் இல்லை வாழ்வை பற்றிய பயம் அல்லது எதிர்பார்ப்பு உள்ளவர்களே மந்திரத்தில் விண்ணப்பத்தை வைப்பார்கள். சீக்கிய மதம் இந்த மந்திரத்தின் மூலம் ஏக இறைவனான குருவிடம் முற்றும் முழுவதுமாக சரணடைந்து விடுகிறது. சரணடைவதின் தத்துவம் மிக அற்புதமானது. இந்து மதத்தின் இதிகாசமான இராமாயணத்தில் சரணடைவதின் தத்துவம் மிக அற்புதமாக யுத்த காண்டத்தில் விவரிக்கப்படுகிறது. ராமனுக்கே “சரண்யன்” என்று பெயர் அதாவது சரணடைபவர்களை தவறாமல் காப்பவன் என்று பொருள். யுத்தத்திற்கு முன்பதாக விபீஷணன் ராமனை நோக்கி வரும்போது ராமனுடன் இருந்த வானரர்கள் ஏன் அனுமான் கூட விபீஷணனை ஏற்றுக்கொள்ள கூடாது என்று வாதிட்டனர்.

ஆனால் ராமனோ சரணடைதலின் தத்துவத்தை மிக விரிவாக விளக்குகிறார். சரணடைபவர்கள் மீது என்றைக்குமே இறைவனுக்கு அலாதி அன்பும் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்கிற தீவிரமும் இருக்கும். இதை ராமன் மூலமாக இதிகாசம் உரைக்கிறது. ராமன் சொல்கிறார் “தர்மத்திலேயே சிறந்த தர்மம் சரணடைபவர்களை காப்பாற்றுவது, மற்ற எல்லா தர்மங்களையும் கைவிட்டாலும் சரணடைகிறவர்களை காப்பாற்றும் தர்மத்தை மட்டும் கைவிட கூடாது. சரணடைபவர்கள் எப்படி பட்டவர்களாக இருப்பினும், அவர்களை காப்பாற்ற வேண்டும். தவறான நோக்கத்தோடு தன்னை வந்து சரணடைபவர்களாக இருந்தாலும், அவர்களை கைவிடுவது பாவமாகும். அதற்கு ராமன் தன் ஆட்சி காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை விளக்குகிறார். “ஒரு மனிதனை புலி துரத்திய போது குரங்கு ஒன்று அவனுக்கு கை கொடுத்து மரத்தின் மீது ஏற்றி விட்டது, துரத்தி வந்த புலி அவனை பார்த்து நீ அந்த குரங்கை தள்ளி விட்டுவிடு உன்னை விட்டுவிடுகிறேன் என்று கூறிய போது அந்த மனிதன் குரங்கை கீழே தள்ளிவிடுகிறான். கீழே விழுந்த குரங்கை பார்த்த புலி “இவன் உனக்கு எவ்வளவு பெரிய துரோகத்தை செய்துவிட்டான், பார்த்தாயா ? நீ மேலே ஏறி அவனை தள்ளிவிடு என்றபோது குரங்கு சரி என்று மேலே ஏறியது. அனால் அந்த மனிதனை கீழே தள்ளிவிட மறுத்தது. பின் அக்குரங்கு சொன்னது, “இவன் என்னை ஏமாற்றி விட்டான் என்றாலும் என்னை சரணடைந்தான். அவனுக்கு நான் அளித்த உதவியை மாற்ற இயலாது. . நான் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று சொல்லியது. ராமன் ஆட்சியில் குரங்கு இத்தகைய தர்மத்தை கடைபிடிக்கும் போது, ராமன் இந்த தர்மத்தை எப்படி மீற முடியும். ராமன் மீறவில்லை என்றால் இறைவன் இந்த தர்மத்தை எப்படி மீறுவார். சரணடைந்தவர்கள் பலன் அடைவது நிச்சயமானது.