உலகில் பல பீஜ மந்திரங்கள் பிரசித்தி பெற்றது. அதில் ஶ்ரீம் மந்திரம் மிகவும் புகழ் பெற்றது. ஶ்ரீம் எனும் மந்திரம் எழுப்பும் தெய்வீக ஒலியில் பிரபஞ்சத்தின் மையத்துடன் நம்மை முழுமையாக இணைத்து கொள்ள முடியும். ஶ்ரீம் மந்திரத்தின் அதிபதியாக விளங்குபவர் அன்னை மஹாலட்சுமி ஆவார். அவரின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும். நலம், வளம் செல்வத்தினை பெறும் பலனையும் இந்த மந்திரம் வழங்குகிறது.

எந்த இட த்திலிருந்து இந்த மந்திரத்தை பிரயோகிக்கிறோமோ அந்த இடத்தின் ஆரா என சொல்லக்கூடிய ஆற்றல் வளையமானது அதீத சக்தியினை பெறுகிறது. மேலும் இதனை சொல்பவரின் செய்பவரின் ஆராவும், மிகுந்த பலத்தினை அடைகிறது. இந்த மந்திர உச்சாடனையின் மூலம் வளத்தை ஈர்க்கவும் இயலும், ஒருவரின் ஆராவில் ஏதேனும் தீமைகள் இருப்பின் அதனை சுத்திகரிக்கவும் இயலும்.

இதனை குறைந்தது108 முறை உச்சாடணம் செய்ய வேண்டும் என்று சொல்கின்றனர். அவ்வாறு தினசரி செய்கிற போதே நாம் எதிர்நோக்கும் நிறைவான பலன்களை பெற முடியும். இந்த மந்திரத்தினை உச்சரிப்பதன் மூலம் ஒருவர் அளவில்லா ஆனந்தத்தையும், மகிழ்வான வாழ்வையும் பெறுவார்கள். ஶ்ரீம் விரத்தத்தை எப்படி மேற்கொள்வது என்று பலருக்கும் குழப்பம் நிலவும். இதற்கென பல விரத காலங்கள் இருக்கின்றன உதாரணமாக 11 நாட்கள், 21 நாட்கள், 40 நாட்கள், 60 நாட்கள் மற்றும் அதிகபட்சமாக ஒரு வருடம் வரைக்கூட இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.

வறுமையை களைவதற்கு ஓர் ஆண்டு விரதமே சான்றோர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்த மந்திரத்தை கணேஷ மந்திரத்துடன் இணைத்து சொல்ல தடைகள் யாவும் விலகும். இந்த மந்திரத்தை மஹா மிருத்யுஞ்செய மந்திரத்துடன் இணைத்து சொல்ல உடல் நோய் சம்பந்தப்பட பிரச்சனைகள் தீரும். எந்த நேரமும் இந்த மந்திரத்தை உச்சரிக்க உகந்த நேரம் தான். ஆனால் குறிப்பாக பிரம்ம முஹூர்த்தம்,, சந்தியா காலங்களில் சொல்வது சிறப்பை தரும்.

இந்த மந்திரத்தின் பலன் ஆனது மனதிற்குள் சொல்வதால் ஏற்படாது. இந்த மந்திர உச்சரிப்பால் ஏற்படும் அதிர்வுகளே நமக்கு பலனை தரக்கூடியவை. எனவே அந்த அதிர்வினை உணர்ந்து உரக்க சொல்ல வேண்டும். இதனால் நல்லதிர்வுகள் நாம் வாழும் இடத்தில் நிரம்பி வருவாய்க்கான புதுப்புது வாய்ப்புகள் திறக்கும். தடைகள் விலகும்.