இந்திய தேசத்திலேயே பாஷாணங்களை கொண்டு ஆகம முறைப்படி தயாரிக்கப்பட்ட சிலை ‘போகர் சித்தர்’ செய்த பழனி முருகன் சிலை ஆகும். இந்த சிலை 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சிலையை செய்த போகர் என்கிற காலங்கி, காஞ்சனமாலையன் என்ற சீடரின் சீடர் ஆவார்.

காலங்கி நந்தி தேவரின் நேரடி சீடர் என்று சொல்லப்படுகிறது. இந்த சிலையின் நோக்கமே மனித உடலில் ஏற்படும வியாதிகளை போக்குவதுதான். ஒவ்வொரு நோய்க்குமான மருந்தை தயார்செய்து தருவதை காட்டிலும் எல்லா நோய்களுக்கும் மருந்தாக, இனி நோய் எதுவும் வராமல் காத்துக் கொள்வதற்குமான ஒரு சிறந்த உபாயமாக பழனி நவபாஷாண சிலை உருவாக்கப்பட்டது.

அபிஷேக மூர்த்தியாக இருக்கும் இந்த சிலை மீது பட்டு வரும் அபிஷேகம் தீரா பிணியையும் தீர்த்து வைக்கும். இந்த நவபாஷாண சிலை சித்தர் அறிவியலின் உச்சபட்ச வெற்றியாக கருதப்படுகிறது. ஏனென்றால் இதை செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. முருகனே கனவில் தோன்றி எப்படி ஒரு சிலையை தனக்கு செய்ய வேண்டும் என்று உத்தரவிடத்தின் பேரில் பழனி மலை பகுதிகளிலேயே இதற்கான மூலிகைகளை தனது சீடரான புலிப்பாணியின் உதவியோடு கண்டுபிடித்து இதை உருவாக்கினார்.

இந்த சிலையை “குமார தந்த்ர” என்கிற வழிமுறையிலேயே வழிபடவேண்டும், இதை உருவாக்கியவரும் முருகனே என்று சொல்லப்படுகிறது. 32 இயற்கையான விஷ பாஷாணங்களையும் 32 செயற்கையான விஷ பாஷாணங்களையும் மொத்தமாக 64 பாஷாணங்களையும் எடுத்துக்கொண்டு அதன் மூலம் “வீரம், பூரம், ரசம், ஜாதிலிங்கம், கந்தகம், கௌரி பாசனம், வெள்ளை பாஷாணம், மருதராஸிங், சிலஸட் ” என்கிற நவபாஷாணங்களாக மாற்றினார் இவை மனித உடலில் உள்ள ஒன்பது மையங்களை ஆட்டொண்டு எந்த வியாதியையும் போக்க கூடியதாக திகழும். இந்த பாஷாணங்களை முறையான அளவில் கலந்து உருவாக்காமல் இருந்திருந்தால் இது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும். இந்த சிலையின் மீது ஊற்றப்படும் பால் பஞ்சாமிர்தம் பக்தர்களுக்கு தரப்படுகிறது, இந்த சிலையின் மீது வைக்கப்படும் ராக்கால சந்தானம் மிகவும் சக்திவாய்ததாக பக்தர்கள் கருதுகிறார்கள்.