ஆசைகளை வெல்வது எப்படி? பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் பதில்.

பல சமயங்களில் தெளிவாக இருக்கும் மனிதர்கள் கூட சில சமயங்களில் தெரிந்தே தவறிழைத்துவிடுகிறார்கள். இதனை செய்தால் தீமை விளையும் என தெரிந்தே சில தவறுகளை, தீய செயல்களை செய்து விடுகிறார்கள். இது ஒரு பிரபஞ்ச விதி, இந்த உலகத்தில் உள்ள அனைவரும் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான குழப்பம் இது.

பகவத் கீதையில் அர்ஜூனன், நம் அனைவரின் சார்பிலும் கிருஷ்ன பரமாத்மாவிடம் இந்த கேள்வியை எழுப்பினார்ர் “என்னுடைய விருப்பத்திற்கு எதிராக என்னை தவறான நம்பிக்கையை நோக்கி என்னை எது இழுத்து செல்கிறது. அந்த ஆற்றலின் பெயர் என்ன? ”

கிருஷ்ணர் சொன்னார் “அது தான் ஆசையினுடைய வலிமை. அது தான் கோபத்தினுடைய வலிமை. இவை ரஜோகுணத்தால் ஏற்படுவது ”

இந்திய புராணங்கள், கற்றலின் படி மூன்று விதமான குணங்கள் இருக்கின்றன. முதலாவது தாமஸ குணம் இது குறைவான ஆற்றலை குறிப்பதாகவும், நம் சுயநினைவை மங்க செய்து வன்முறை,காமம், மற்றும் பேராசை போன்றவைகளை நோக்கி இட்டு செல்வதாகவும் இருக்கிறது.

அடுத்து ரஜோ குணம், இதை தான் பகவான் கிருஷ்ணர் குறிப்பட்டார். இது எப்போதும் தீவிரமாக இயங்கும் தன்மையுடையது இதன் மூலம் மகிழ்ச்சியை அடைவதற்காக எப்போதும் நம்மை பதட்டத்திலேயே வைத்திருக்கும்

இறுதியாக சாத்வீக குணம் இது அமைதையை நோக்கி, உண்மையை நோக்கி இட்டு செல்லும்.

இதில் ரஜோகுணமே ஆசையின் காரணம், எப்போது அந்த ஆசை நிறைவேறவில்லையோ அது கோபமாக, பொறாமையாக இன்னும் பல்வேறு விதமான எதிர்மறை எண்ணங்களாக மாறுகின்றன.

ஆசைகளின் பிடியிலிருந்து வெளியேறுவது எப்படி?

உங்கள் மனதில் ஒரு ஆசை ஆழ ஊன்றி வேர்விடும் அதனை நிதானமாக கவனித்து பாருங்கள். உதாரணமாக, நீங்கள் ஒரு அழகான காரை பார்க்கிறீர்கள். எத்தனை அழகானது. எனக்கு அந்த கார் வேண்டும். எனக்கு அந்த கார் தேவை. ஆனால் அந்த காரை வாங்கும் அளவு என்னிடம் வசதியில்லையே ” இந்த எண்ணம் தோன்றும் போது அது கோபமாக ஆற்றாமையாக வெளிப்படுகிறது.

இதுவே நம் மனதில் சுயகட்டுப்பாடும், போதுமான நம்பிக்கையும் இருக்கும்பட்சத்தில், அதே காரை பார்க்கிற போது மனம் சொல்லும் ” அது ஓர் அழகான கார். ஆனாலும் கூட என்னிடம் இருப்பதே போதுமானதாக இருக்கிறது. அதுவே என் தேவைகள் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிறது

வாழ்வை எளிமைப்படுத்துங்கள், தேவையற்ற தேவைகளிலிருந்து வெளியேறுங்கள். எப்போது நம் குணம் சாத்வீகமாக இசைந்து இருக்கத்துவங்குகிறதோ அப்போது அமைதியும், ஆனந்தமும் பிறக்கும்.

உங்கள் அன்றாட வேலைகளை கவனக்குவிப்புடன் செய்யுங்கள். காரணம் எப்போது கவனம் குவிகிறதோ அப்போது மகிழ்ச்சி உருவாகும் என்று ஆய்வுகள் சொல்கின்றன. காரணம் கவனக்குவிப்பும், மகிழ்ச்சியும் ஒன்றோடு ஒன்று இணைந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து. தொடர்ந்து தியானித்திருங்கள் அது பதட்டத்தை தவிர்க்கும். தியானம் செய்கிறபோது ஆசைகளை அடக்குவது சுலபமான காரியம் அல்ல என்பது, ஆனால் முயன்றால் இது சாத்தியம் என்பதும் விளங்கும். நாம் ஆன்மீக பாதையில் பயணிக்கிற போது ஆசையின் விதைகளை முளையிலேயே அழித்தெறிய முடியும். தவறான ஆசைகளே மனிதகுலத்தின் முதல் எதிரி என்பது ஶ்ரீ யுக்தேஸ்வர், யோகானந்த் குருஜி அவர்களின் கருத்து. இந்த உலகத்தில் சுயகட்டுப்பாட்டுடன் இயங்கும் சிங்கமென கர்ஜியுங்கள். உங்கள் தேவையற்ற ஆசைகள் உங்கள் கண் முன்னே சிறு தவளை போல் அலறி துடித்து வெளியேறுவதை நீங்கள் காண்பீர்கள்.