இந்து கோயில்கள் பண்டைய காலங்களில் நாகரீகம் வளர்ந்த எல்லா இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது, தற்போது கூட ஈராக்கில் ராமர் வில் மற்றும் அம்புடன் இருக்கும் சுவர் சிற்பத்தை கண்டு பிடித்துள்ளனர், இது போன்று துருக்கியில் சிவலிங்கம், பசிபிக் தீவுகளில் விநாயகர் என்று இந்து கலாச்சார அடையாளங்கள் உலகெங்கும் கண்டு பிடிக்க படுகிறது. வரலாற்று ஆசிரியர் பி ன் ஓக் கிறிஸ்துவ இஸ்லாமிய மதங்களின் மூலம் வேத மார்க்கமே என்று கூறுகிறார், உலகின் எல்லா மதங்களுமே வேதம் போதித்த தர்மத்தில் இருந்தே கிளைத்தன என்று கூறுகிறார். கிறித்துவ மதத்தின் தலைமை பீடமாக இருக்கும் வாட்டிகன் என்பதே சமஸ்க்ரித மொழியின் திரிபுதான் என்றும் அதற்க்கு வேத யாகங்கள் நடக்கும் இடம் என்றும் பொருள் உள்ளது. மேலும் அங்கு நடந்த அகழ்வாராய்ச்சியில் சிவ லிங்கங்கள் கிடைத்துள்ளன, வாட்டிகன் நகரத்தின் அமைப்பை வேத கால முறைப்படி உருவாக்கப்பட்ட யாக பூமியின் அமைப்பாக உள்ளது.

இந்த சிவலிங்கம் இப்போது ரோம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எம் எஸ் வாட்ஸ் ஹரப்பா நகரத்தில் 5000 ஆண்டு பழமையான சிவ லிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது மத்திய அமெரிக்காவின் காடுகளில் சார்லஸ் லிண்டென்பேர்க் என்கிற ஆராய்ச்சியாளர் மிகப்பெரிய மனித வாழ்விடத்திற்கான பகுதியை கண்டு பிடித்தார் அங்கு பிரமாண்டமான குரங்கின் சிலை இருந்ததாகவும் அதை அவர்கள் வழிபட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இராமாயணத்தில் அனுமான் பாதாள லோகத்திற்கு சென்றதாகவும் (தற்போது இது இந்தியாவின் மறுபக்கமாக அமெரிக்கா கண்டம்) அங்கு இருந்த அரசனை கொன்று அவன் மகனை முடிசூடியதாகவும் வருகிறது. தென் அமெரிக்காவின் கடவுளர்கள் எல்லோரும் அனுமான் இங்கு இருப்பதை போல சிகப்பு வர்ணத்திலேயே வழிபடப்படுகிறார்கள் என்பதும் இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று.இது போன்று உலகெங்கிலும் இந்து மதத்தின் வரலாற்றின், மற்றும் நாம் வழிபடும் கடவுளர்களின் வழிபடும் வரலாறும் இருந்திருப்பதற்கு தற்போது அங்கெல்லாம் நடக்கும் கண்டுபிடிப்புகள் சாட்சியாக அமைகின்றன