திருச்சி ரயில் நிலையத்தில் நூறு வருடங்களுக்கு முன்பு பயணி ஒருவர் ரயிலில் இருந்து பெரிய சாக்கு மூட்டையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு இறங்கி நடந்து வந்தார் , டிக்கெட் பரிசோதனை செய்யும் நபர் அவர் தூக்கி வந்த பொருள் எடை அதிகமாக இருப்பதாக கூறி அபராத தொகை கட்ட சொன்னார் .

அவர் தன்னிடத்தில் போதிய பணம் இல்லை என்றதும் மூட்டையை அங்கேயே வைத்து விட்டு செல்லும் படி கூறினார் . பிறகு நீண்ட நாட்களாகியும் யாரும் வராததால் அதை ஊழியர்கள் பிரித்து பார்த்தனர் அதில் ஆஞ்சநேயர் சிலை இருந்ததை கண்டு இரண்டாம் பிளாட்பார நடை மேடையில் வைத்து வழிபட தொடங்கினர் . நடைபாதை ஆஞ்சநேயர் என்று பெயர் பெற்ற இவர் மக்களின் பயணத்தின் போது அவர்களை பாதுகாக்கிறார் என்பது நம்பிக்கை .

1928 ஆம் ஆண்டு ஈரோடு நாகபட்டினத்தை இணைக்கும் இரயில் பாதை அமைக்கும் பணி நடந்த போது திருச்சி ரயில் நிலையத்தில் இருந்த அந்த ஆஞ்சநேயரை அகற்றும் படி அங்கிருந்த ஆங்கிலேய மேளாலர் ஆர்ம்ஸ்பி உத்தரவிட்டார் . கோயில் அமைப்பு இடிக்கபட்ட போதும் ஆஞ்சநேயர் சிலையை அகற்ற முடியவில்லை . அன்று பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. அன்று இரவு அதிகாரியின் கனவில் அந்த ஆஞ்சநேயர் இருந்த இடத்திற்கு அருகில் இரண்டு ரயில் எஞ்சின்கள் தடம் புரண்டதை கண்டார் . காலையில் அந்த இடத்திற்கு வந்து பார்த்த போது கனவில் கண்ட காட்சி அங்கு அப்படியே நடந்து இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பிறகு இவருக்கு முறை படி பூஜைகள் செய்து ரயில் நிலையம் அருகிலேயே கல்லுக்குழி என்ற இடத்தை ஒதுக்கி இவரே ஆஞ்சநேயருக்கு கோயிலும் கட்டினார் . இப்போது இந்த கோயில் பெரிதாக அமைந்து பிரபலமாகியுள்ளது . இவர் குபேர ஆஞ்சநேயர் தன் கால்களை வடக்கு திசை நோக்கி வளைத் திருப்பது அதிக சிறப்புடையது . இந்த கோயிலில் உள்ள ஆலமரம் ஒன்று இந்த பகுதியிலயே மிக பழமையானதாக கருதப்படுகிறது . பாஸ்போர்ட் விசா கிடைப்பதில் சிக்கல் உள்ளவர்கள் இவரை வழிபடுகிறார்கள் . இவரது அருளால் சிங்கப்பூர் சென்ற பக்தர் ஒருவர் இவருக்கு தங்க கவசம் அணிவித் துள்ளார். இக்கோயிலு க்கு திருச்சி ஜங்ஷன் சுரங்கப்பாதை வழியாகவும் , திருச்சி மன்னார்புரம் ரோட்டில் கல்லுக்குழி வழியாகவும் செல்லலாம் .