விபுதி என்பது இந்துக்கள் வணங்கி அணிவதாகும். விபுதி அல்லது திருநீரு என்பது முக்கியமாக திருநீற்றின் மத்தியில் அணிந்து உடலின் எல்லா பாகங்களிலும் பூசக்கூடியதாக இருக்கிறது. இதற்கு பல வித புராண கதைகள், ஆன்மீக அம்சங்கள் சொல்லப்பட்டாலும். மிக பொதுவாக சொல்லப்படுவது திருநீறென்பது நமக்கு நம் அறியாமையை அழிக்க உதவுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.

இந்த திருநீற்றின் புகழை “மந்திரமாவது நீரு , வானவர் மேலது நீரு ” என்கிற பதிகத்தினால் நம்மால் அறிய முடிகிறது. தீராத வினைகளையும் தீர்க்க வல்லது திருநீறு. அதனை அக்ஞா எனும் சக்கரமான நெற்றிக்கு மத்தியில் அணிகிற போது அதனால் அந்த சக்கரம் தூண்டப்படுகிறது என்பது ஆன்மீக அம்சமாகும். அது மட்டுமின்றி பெரியோர்களை, ஆன்மீக ஆன்றொர்களை, திருத்தலங்களில் இருக்கும் கடவுளை வணங்கையில் அருள் பிரசாதமாக நமக்கு வழங்கப்படுவதும் திருநீறேயாகும்.

சமஸ்கிருதத்தில் விபூதி என்பது, “பெருஞ்சிறப்பு ” என்று பொருள். விபூதியினை கொண்டு எதிர்மறை எண்ணங்களை விரட்ட முடியும், சமயங்களில் பல நோய்களுக்கு தீர்வாக அமையும். விபூதிக்கு தீர்வை நல்கும் மகத்துவ குணங்கள் இருப்பதை ஆயுர்வேதமும் உறுதி செய்கிறது.

ஒரு மனிதருக்கும் புருவ மத்தி, உள்ளங்கை, பாதம், இவையெல்லாம் நல்ல மற்று தீய அதிர்வுகளை ஈர்க்கும் முக்கிய பகுதியாக அமைகிறது. எனவே தீருநீற்றை கழுத்து, நெற்றி மத்தி போன்ற இடங்களில் பூசுவது பெரும் நன்மை தரும். ஒரு மனிதருக்கு உடலில் இடையூறு நேருகிறது எனில் அதற்கான காரணம் அவர் தன்னுடைய எதிர்ப்பு சக்தியை இழக்கிறார் என்பது. இதனை ஆன்மீக ரீதியில் சொல்வதானால் ப்ராண சக்தியை உடல் இழக்கிறது என்று பொருள் இதனை மீட்டெடுக்க சில சாதனக்கள், தியான வழிமுறைகள் போன்றவற்றோடு விபூதியை உள்ளங்கைகளில் பூசி அதனை நுகரும் போதும் ஒருவர் தன் பிரான சக்தியை மீட்டெடுக்க முடியும்.

ஒருசிலருக்கு பில்லி சூனியம் போன்ற தீய சக்திகளின் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் அதிலிருந்து விடுவிக்கும் தீர்வாகவும் விபுதி அமைகிறது. சிவபூஜையில் முக்கிய அம்சமாக கருதப்படும் விபூதி புனித சாம்பல் என்பதை குறிக்கிறது. ஒன்றை எரித்து உருவானதே சாம்பல். அந்த வகையில் நம் அறியாமையை எரித்து, நம் தீமைகளை எரித்து நமக்கு நன்மை தர வல்லது .