திருச்சி தஞ்சாவூர் சாலையில் திருச்சியலிருந்து 11 கி மீ தொலைவில் உள்ளது திருவெரும்பூர். இவ்விறைவன் எறும்பீஸ்வரர் என்றும் இறைவி செளந்தரநாயகி என்றும் அழைக்கப்படுகிறார். முன்பு தாரகாசுரன் என்ற அரக்கன் தேவர்கள் துன்பப்படுத்தியதால் நாரதரிடம் சென்று முறையிட்டனர். நாரதர் திருச்சி அருகில் உள்ள இந்த ஸ்தலத்திற்கு சென்று ஈசனை வழிபடுமாறு அறிவுரை கூறினார். அதன் படி தேவர்கள் இத்தலத்திற்கு வந்து எறும்பாக மாறி ஈசனை அர்சசிக்க திருமேனி மீது ஏற முயற்சித்தனர் சிவ லிங்கம் வழவழப்பாக இருந்ததால் எரும்புருவம் எடுத்த தேவர்கள் அவர் மீது ஏற முடியாமல் சருக்கி விழ ஆரம்பித்தார்கள்.

இதை கண்டு இரக்கம் கொண்ட ஈசன் தானே உருமாறி புற்று வடிவம் எடுத்தார். அதன் காரணமாக இவ்வூர் திருவெறும்பூர் என்றும் இறைவன் எறும்பீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் ஆலயம் சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. கோயிலின் நுழைவு வாயில் வடக்கு திசையில் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ள இக்கோயிலில் முருகன் விநாயகர் சிலைகள் உள்ளன. முழுவதும் கற்பாறைகளால் ஆன கருவறையின் உள்ள மூலவர் எறும்பீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். இந்த லிங்கம் சொரசொரப்பாக உள்ளதால் ஈரமில்லாமல் நீர்படாமல் பாதுகாக்க படுகிறது

இந்த லிங்கம் ஒரு புற்று போல எந்த வடிவமும் இல்லாமல் இருப்பதால் இதற்கு அபிஷேகம் கிடையாது மாறாக எண்ணை காப்பு மட்டுமே சாற்றுகிறார்கள் . தினமும் சுவாமிக்கு பூஜை செய்யும் போது எறும்புகள் கருவறையில் வரிசையாக ஊர்ந்து வந்து பூஜை பொருட்கள் நெய் வைத்ய பொருட்களை எடுத்து செல்கின்றன . ஈசனே இப்படி எறும்பாக வருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள் .

இந்த நேரத்தில் ஈசனை தரிசித்து வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது . இங்கு பிரகாரத்தில் உள்ள சொர்ண கால பைரவரையும் அதற்கு எதிரே உள்ள கஜலஷ்மியையும் சேர்த்து வழிபட்டால் சகல பாபங்களும் விலகுவதாக கூறப்படுகிறது . ஐஸ்வரியமும் பெருகுகிறது . இந்த சுவாமிக்கு வஸ்த்திரம் சாற்றி சர்க்கரை பொங்கல் படைத்து வழிபட சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் இயங்கும் தன்மை வரும் என்பது நம்பிக்கை . இத்தலத்தில் பிரம்ம தீர்த்தம் பதும தீர்த்தம் மது தீர்த்தம் குமார திர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் உள்ளன . இந்த கோயில் அமைந்துள்ள மலையானது வாயு பகவான் ஆதிஷேசனுடன் நடந்த சண்டையில் பெயர்த்த மலையின் ஒரு பகுதி என்று நம்பப்படுகிறது.